குயிலின் ஓசை சங்கீதமா?? சப்தமா??
குயிலைப் பொறுத்தமட்டும் ஒலியெழுப்புவது அதன் இயல்பு..
அது போய்ச்சேரும் செவிகளில்தான் அது சப்தமாகவோ, சங்கீதமாகவோ சங்கமிக்கிறது!!
சிலரை ரசிக்க வைக்கிறது; சிலரை வெறுக்க வைக்கிறது..
ஆனாலும் அது இசைத்துக் கொண்டே இருக்கிறது..
குயிலின் ஓசைகள் இயல்பானது, இயற்கையானது..
மற்றவர்க்காய் இல்லாமல் தன் சந்தோஷத்திற்காய் பாடும் குயில் போலத்தான் நானும்..
என் சந்தோஷத்திற்காகவே பாடுகின்றேன்..
இது சப்தமாவதும் சங்கீதமாவதும் உங்களைப் பொறுத்தது..
No comments:
Post a Comment